ஜெயலலிதா மரணம்: விசாரணை ஆணைய காலத்தை நீட்டிக்க கோரி நீதிபதி கடிதம்

சென்னை,

மிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது.

இந்த விசாரணை ஆணையத்துக்கு 3 மாத கால அவகாசம் கொடுக்கப்பட்டது. அதன்படி வரும் 25ந்தேதியுடன் அவகாசம் முடிவடைவதால், மேலும் 6 மாதம் அவகாசம் வேண்டும் என்று நீதிபதி ஆறுமுகசாமி அரசுக்கு கடிதம் எழுதி உள்ளார்.

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நிலைக்குறைவு காரணமாக கடந்த வருடம் டிசம்பர் 5ம் தேதி உயிரிழந்தார். சுமார் 70 நாட்கள் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்த அவரது உடல்நிலை குறித்து பல்வேறு சந்தேகங்கள் உள்ளதாக ஏராளமான புகார்கள் வந்தததை தொடர்ந்து, அவரது மரணம் குறித்து, விசாரிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து உத்தரவிட்டது.

இந்நிலையில் விசாரணை ஆணையத்தின் பதவி காலம் வரும் 25ம் தேதி முடிவடைவதால், மேலும் 6 மாதம் அவகாசம் வழங்குமாறு பொதுத்துறை செயலாளருக்கு நீதிபதி ஆறுமுகசாமி கடிதம் எழுதியுள்ளார்.

அதில், பிரமாணப் பத்திரங்களை அளித்த பலரிடம் இன்னும் விசாரிக்க வேண்டியிருப்பதால் அவகாசத்தை நீட்டிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.