ஜெயலலிதா நினைவிடம் வழக்கு: தமிழகஅரசுக்கு உயர்நீதி மன்றம் நோட்டீஸ்

சென்னை:

றைந்த  தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு மெரினாவில் நினைவிடம் அமைப்பதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், வரும் (செப்டம்பர்) 18 ம் தேதிக்குள் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

ஏற்கனவே ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட டிராபிக் ராமசாமி வழக்கு உள்பட 5 வழக்குகள், கருணாநிதிக்கு நினைவிடம் அமைப்பது தொடர்பான வழக்கில் வாபஸ் பெறப்பட்டது. இந்த நிலையில்,  மெரினாவில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்ட தடை விதிக்க கோரி ரவி என்பவர்  வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அதைத்தொடர்ந்து, இந்த வழக்கில்  செப்.18-க்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

மிழக முதல்வர் ஜெயலலிதா 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி மரணமடைந்தார். அதன் பின் அவரது உடல் சென்னை மெரினா கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்டது. ரூ.50.08 கோடி செலவில் அவருக்கு அங்கு நினைவிடம் கட்ட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி , எம்.ஜி.ஆர்.சமாதி அமைந்துள்ள வளாகத்திலேயேஜெயலலிதாவுக்கு  நினைவு மண்டபம் கட்டப்படுகிறது. அதற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த மே மாதம் 7ந்தேதி அதிகாலைவ யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.

இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, காமராஜ், செங்கோட்டையன், வேலுமணி, சண்முகம், செல்லூர் ராஜு, மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். தொடர்ந்து 9 மணி அளவில் அடிக்கல் நாட்டும் பணி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து  பீனிக்ஸ் பறவை வடிவில் அமைக்கப்பட உள்ள ஜெயலலிதா நினைவு மண்டபம்  குறித்த படங்கள் வெளியிடப்பட்டது.

பீனிக்ஸ் பறவை வடிவத்தில் அமைக்கப்படவுள்ள ஜெ.நினைவு மண்டபம்இதை எதிர்த்து, திமுகவின் அன்பழகன் மற்றும் டிராபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர். அதில், கடற்கரை கட்டிடம் கட்ட அனுமதி கிடையாது என்பதை நினைவுபடுத்தி இருந்தனர்.

இதற்கிடையில் திமுக தலைவர் கருணாநிதி மறைவை தொடர்ந்து, அவரது உடலும் அண்ணாசமாதி வளாகத்திலேயே அடக்கம் செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டது. அப்போது திமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கில், கருணாநிதி உடலை அடக்கம் செய்யும் வகையில், ஜெ.சமாதி கட்டுவது தொடர்பான வழக்குகள் அனைத்தும் வாபஸ் வாங்கப்பட்டன.

இந்த நிலையில், ஜெவுக்கு சமாதி கட்ட தடை விதிக்க வேண்டும் என்று புதிய வழக்கு ரவி என்பவரால் தொடரப்பட்டது. இந்த வழக்கில், செப்.18-க்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி  வழக்கை ஒத்தி வைத்தது.