ஜெயலலிதா சிகிச்சை அறிக்கையை ஏற்க முடியாது! தீபா

--

சென்னை,

மிழக முதல்வராக இருந்து மரணமடைந்த ஜெயலலிதாக்கு அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை குறித்த அறிக்கையை ஏற்க முடியாது என்றும், நீதி விசாரணைதான்  தேவை என்றும் ஜெ.தீபா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மறைந்தமுன்னாள் முதல்வர் 72 நாட்களாக அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று, இறுதியில் மரணத்தை தழுவினார்.

அவரது மரணத்தில் பல்வேறு சந்தேகங்களை எழுந்துள்ள நிலையில், நேற்று எய்ம்ஸ் டாக்டர்களின் அறிக்கையை, தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் டில்லியில் வெளியிட்டார். அதைத்தொடர்ந்து இன்று இந்திய மருத்துகவ கவுன்சில் மருத்துவர்கள் ஜெ.வுக்கு அளித்த சிகிச்சை குறித்து விளக்கம் அளித்தனர்.

இந்நிலையில், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள மருத்துவ அறிக்கைகளை ஏற்க முடியாது; முறையான நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என எம்ஜிஆர்-அம்மா- தீபா பேரவை பொதுச்செயலர் தீபா வலியுறுத்தி தனது முகநூல் பக்கத்தில் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

ஜெயலலிதாவின் சிகிச்சைகள் குறித்த எய்ம்ஸ் மற்றும் அப்பல்லோ மருத்துவமனைகளின் நேற்றைய அறிக்கைகள் முன்னுக்கு பின் முரணாக  உள்ளது. ஆரம்பத்தில் செப் 22-ம் தேதி காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட தாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

நேற்றைய அறிக்கையில் மூச்சு கோளாறு போன்ற காரணத்திற்காக மயக்க நிலையில் அனுமதிக்கப்பட்டார் என கூறப்பட்டுள்ளது. மருத்துவ மனையில் ஜெயலலிதா உணவு அருந்தினார், நடைபயிற்சி மேற்கொண்டார் ,தொலைக்காட்சி பார்த்தார் என வந்த தகவல்கள் எதுவும் உண்மையானவை என இதுவரை மருத்துவமனை சார்பில் உறுதி செய்யப்படவில்லை.

ஜெயலலிதாவின் மரணம் குறித்த பல்வேறு சந்ந்தேகங்கள் இந்திய அளவில் நிலவி வருகின்றது. இதை தெளிவு படுத்த வேண்டிய தமிழக அரசு குழப்ப நிலையில் உள்ளது.

முறையான நீதி விசாரணை நடத்தி ஜெயலலிதாவின் மர்ம மரணத்திற்கு விளக்கம் தர வேண்டும். நேற்றைய மருத்துவ அறிக்ககள் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இல்லை. மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து இதற்காக குரல் கொடுக்க வேண்டும்.

இவ்வாறு தீபா வலியுறுத்தியுள்ளார்.