சென்னை:

ஜெயலலிதாவின் மகள் என்று கூறி அம்ருதா என்பவர் தொடுத்துள்ள வழக்கில், ஜெ ரத்த மாதரியை அளிக்க அப்போலோ மருத்துவமனை கேட்ட கால அவகாசத்தை தர உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மகள் தான்தான் என உச்சநீதிமன்றத்தில் பெங்களூரை சேர்ந்த அம்ருதா என்பவர் வழக்கு தொடுத்தார்.  அதற்கான டிஎன்ஏ சோதனை நடத்த வேண்டும் என்றும் தங்கள் குடும்ப வழக்கப்படி ஜெயலலிதாவுக்கு இறுதிச்சடங்கு செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் அவர் தனது மனுவில் கோரியிருந்தார். இதனை நிராகரித்த உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு உத்தரவிட்டது.

இதையடுத்து அம்ருதா, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். ஜெயலலிதாவின் ரத்த மாதிரியையும்  தனது ரத்த மாதிரியையும் எடுத்து டி.என்.ஏ. சோதனை நடத்த வேண்டும் என்றார்.

ஜெயலலிதாவின் ரத்த மாதிரியை அளிக்க அப்பல்லோ மருத்துவமனை கால அவகாசம் கேட்டது.  இதை ஏற்றுக்கொள்ளாத நீமன்றம், ஜெயலலிதாவின் ரத்த மாதிரியை அளிக்கும்படி அப்பலோ மருத்துவமனை நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது.