அம்ருதா – ஜெயலலிதா

 

சென்னை:

பெங்களூருவைச் சேர்ந்த அம்ருதா என்பவர், மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மகள்  என்று தன்னை கூறிக்கொள்கிறார்.

இது குறித்து உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்தார். “ஜெயலலிதாவின் உடலை தோன்டியெடுத்து பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் அவர் தனது மனுவில் தெரிவித்திருந்தார்.

ஆனால் அவரது மனுவை நிராகரித்த உச்சநீதிமன்றம் மாநில உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு  அறிவுறுத்தியது. இதைத்தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அம்ருதா மேல்முறையீடு செய்தார்.

இங்கும், ஜெயலலிதாவுக்கு பிறந்த மகள் தான்தான் என்பதை நிரூபிக்கும் வகையில் ஜெயலலிதா உடலை தோன்டியெடுத்து டிஎன்ஏ சோதனை நடத்த வேண்டும் என்றும் அவர் தனது மனுவில் தெரிவித்துள்ளார். இந்த மனு இன்று பிற்பகல் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி வைத்தியநாதன், மரபணு சோதனைக்கு ஏன் உத்தரவிடக்கூடாது என்று கேள்வி எழுப்பினார்.

இதையடுத்து மரபணு சோதனைக்கு நீதிபதி உத்தரவிட்டால், ஜெயலலிதாவின் உடல் தோண்டி எடுத்து மரபணு சோதனை செய்யப்படும் என்ற யூகம் பரவியிருக்கிறது.