ஜெயலலிதாவுக்கு முன்னாள் உதவியாளர் இசையஞ்சலி (வீடியோ)

--

மிழகத்தின் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் இரண்டாவது நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. பலரும் அவருக்கு நினைவஞ்சலி  செலுத்தி வருகிறார்கள். இந்த நிலையில், ஜெயலலிதாவின் முன்னாள் உதவியாளர் பூங்குன்றன், பாடல் மூலம் அவருக்கு இசையஞ்சலி செலுத்தியுள்ளார்.

ஜெ.வுடன் பூங்குன்றன் ( கோப்புப்படம்)

“இதயம் உன்னை பாடும் நல்ல எண்ணங்கள் மாலைகள் போடும்..” என்று துவங்கும் பாடலை ராகத்துடன் பாடி, அதை வீடியோவாக சமூகவலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

பாடலுக்குப் பிறகு.. “அம்மா.. மீண்டும் வா..” என்று உருக்கமாக, வசன கவிதை போல் பேசியிரும் இருக்கிறார்.

அந்த வீடியோ..

 

#jayalalitha #Formerassistant  #Poongundran #musicTribute  #Second #Memorial