நீதி மன்றத்தால் தடை செய்யப்பட்ட ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு புத்தகம் வெளியாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஜெயலலிதா உயிருடன் இருக்கும் போது எழுத்தாளர் வாஸந்தி எழுதி வெளியிட இருந்த புத்தகம் ‘ஜெயலலிதா: மனமும் மாயையும்’. இந்த புத்தகத்தை தடை கோரி, நீதிமன்றத்தை நாடினார் ஜெயலலிதா. அவர் தரப்பு வாதத்தை ஏற்று புத்தகத்துக்கு நீதிமன்றம் தடை விதித்தது.

இந்த நிலையில் ஜெயலலிதா இறப்புக்குப் பிறகு, பல பகுதிகள் நீக்கப்பட்ட நிலையில் கடந்த ஜனவரி மாதம் இந்த புத்தகம் வெளிவந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

முதல் பாகத்தில் ஜெயலலிதாவின் சிறு வயது வாழ்க்கை, திரைவாழ்க்கை, எம்.ஜி.ஆருடனான நெருக்கம், அரசியல் நுழைவு பற்றிய சம்பவங்கள் உள்ளன. இரண்டாவது பாகத்தில் 1991ஆம் ஆண்டு தேர்தல் வெற்றிக்கு பின் அவரது வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் கூறப்பட்டுள்ளன.

பல பகுதிகள் நீக்கப்பட்டாலும் எம்.ஜி.ஆரை திருமணம் செய்ய விரும்பியது, எம்.ஜி.ஆரும் திருமணம் செய்துகொள்ள சம்மதித்து ஏமாற்றியது பற்றிய தகவல்களும் இதில் இருப்பதாக கூறப்படுகிறது.