ஜெயம் ரவியின் ‘பூமி’ படத்தின் கடைக்கண்ணாலே பாடல் ப்ரோமோ…..!

இயக்குனர் லக்ஷ்மன் இயக்கத்தில், நடிகர் ஜெயம் ரவி நடிக்கும் படம் ‘பூமி’ . சுஜாதா விஜயகுமார் தயாரிக்கும் இந்த படம் ஜெயம் ரவியின் 25-வது படமாகும். இதில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நித்தி அகர்வால் நடித்து வருகிறார்.

இந்தப் படத்திற்கு இமான் இசையமைத்து வருகிறார். இப்படம் விவசாயம் பற்றிய திரைக்கதை என்பது குறிப்பிடத்தக்கது.

மூன்றாவது முறையாக லக்‌ஷ்மண்- ஜெயம் ரவி இணைந்துள்ள இப்படத்திற்கு டட்லி ஒளிப்பதிவு செய்கிறார் .மே 1-ம் தேதி வெளியாக இருந்த இத்திரைப்படம் கொரோனா அச்சுறுத்தலால் தள்ளிப் போனது.

இந்நிலையில் தொடர்ச்சியாக இணையதளங்களில் பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகி வரும் நிலையில் தற்போது இந்தப் பட்டியலில் ஜெயம் ரவியின் ‘பூமி’ யும் இணைந்துள்ளது .

இந்த படத்தின் முதல் பாடலான தமிழன் என்று சொல்லடா என்ற பாடல் ஜெயம் ரவியின் பிறந்தநாளை முன்னிட்டு முன்னிட்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இதனை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாவது பாடல் வரும் அக்டோபர் 21ஆம் தேதி வெளியாகும் என்ற அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

https://twitter.com/theHMMofficial/status/1318152415221264385

தற்போது இந்த பாடலின் ப்ரோமோ வீடியோ ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.