ஓடிடியில் ரிலீசானதும் இணையத்தில் வெளியான ‘பூமி’….!

 

மே 1-ம் தேதி வெளியாக இருந்த ஜெயம் ரவியின் 25 ஆவது திரைப்படம் கொரோனா அச்சுறுத்தலால் தள்ளிப் போனது.

இதையடுத்து டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் பொங்கல் தினத்தில் ‘பூமி’ திரைப்படம் வெளியாகும் என படக்குழு அறிவித்தது.

அதன்படி இன்று காலை படம் வெளியான சில மணி நேரங்களில் திருட்டுத்தனமாக படத்தை இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சியில் உள்ளனர்.

2021-ம் ஆண்டு பொங்கலுக்கு மாஸ்டர், ஈஸ்வரன் ஆகிய படங்கள் தியேட்டரிலும் ஜெயம் ரவியின் பூமி ஓடிடி தளத்திலும் முத்தையா இயக்கத்தில் விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் நடித்த புலிக்குத்தி பாண்டி சன் டிவியிலும் வெளியாகிறது.