அட்லீ தயாரிப்பில் நடிக்கிறார் ஜெயம் ரவி..உதவியாளர் இயக்குகிறார்..

ளபதி விஜய் நடித்த தெறி, மெர்சல், பிகில் என 3 படங்களை குறுகிய காலத்தில் இயக்கி பரபரப்பானவர் அட்லீ. அடுத்து பிகில் 2ம் பாகம் இயக்குவேன் என்று அவர் அறிவித் திருக்கிறார் ஆனால் அதுபற்றி முழுவிவரம் வெளியிடவில்லை.


இதற்கிடையில் ஷாருக்கான் நடிப்பதற்காக ஒரு ஸ்கிரிப்ட் உருவாக்கி வருகிறார். அதுவும் எப்போது தொடங்கும் என்று உறுதியாக வில்லை. இந்நிலையில் அட்லி சொந்தமாக படம் தயாரிப்பதில் கவனம் செலுத்துகிறார். ஏற்கனவே அர்ஜூன்தாஸ் நடிக்கும் அந்தாகாரம் என்ற படத்தை தயாரித்து வருகி றார். அடுத்து தனது உதவியாளர் இயக்கும் புதிய படத்தை தயாரிக்கிறார். இதில் ஜெயம் ரவி நடிக்க உள்ளார்.
ஜெயம் ரவி தற்போது மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கிறார். ஏற்கனவே அவர் நடித்துள்ள பூமி படம் ரீலீஸுக்கு தயாராக இருக்கிறது என்பது குறிப்பிடத்க்கது.