கர்நாடகா இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை: ஜெயநகர் தொகுதியில் காங்கிரஸ் முன்னிலை

பெங்களூரு:

ர்நாடகாவில் கடந்த 11ந்தேதி நடைபெற்ற ஜெயநகர் இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது.

முதல்சுற்றில் காங்கிரஸ் வேட்பாளர் சவுமியா ரெட்டி முன்னிலை வகித்து வருகிறார்.  காங்கிரஸ் வேட்பாளர் சவுமியா ரெட்டி 3,749 வாக்குகள் பெற்றுள்ளார். பா.ஜ.க. வேட்பாளர் பிரகலாத் பாபு 3,322 வாக்குகள் பெற்று பின்னடைவு சந்தித்துள்ளார்.

2வது சுற்றில், பாஜக வேட்பாளர் பிரஹலாத்தை விட காங்கிரஸ் வேட்பாளர்  சவுமியா ரெட்டி 15000 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்

கர்நாடகாவில் கடந்த மாதம் 12ந்தேதி நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் சமயத்தில்,  ஜெயநகர் தொகுதியில் போட்டியிட்ட பாஜ வேட்பாளர் மரணம் அடைந்ததை தொடர்ந்து, அந்த தொகுதியில் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டு, கடந்த 11ந்தேதி நடைபெற்றது.

இந்த தொகுதியில் மரணம் அடைந்த பா.ஜ.க, வேட்பாளர் விஜயகுமார் தம்பி பிஎன் பிரகலாத் பா.ஜ.க, வேட்பாளராக நிறுத்தப்பட்டு உள்ளார். அவரை எதிர்த்து காங்கிரஸ் வேட்பாளர் சவுமியாரெட்டி களமிறங்கி உள்ளார். அவருக்கு ஆதரவாக மதசார்பற்ற ஜனதாதளம்  தன்னுடைய வேட்பாளரை வாபஸ் பெற்றுள்ளது.

 

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Ist Round Congress leading, Jayanagar by-election in Karnataka results Counting, கர்நாடகா: ஜெயநகர் தொகுதியில் மஜக வேட்பாளர் வாபஸ்...காங்கிரஸூக்கு ஆதரவு
-=-