சிக்ருபதி ஜெயராம் படுகொலையில் சிக்கிய நடிகை….!

 

கோஸ்டல் பேங்க், எக்ஸ்பிரஸ் டிவி ஆகியவற்றின் இயக்குநராக இருக்கும் சிக்ருபதி ஜெயராம், கடந்த ஜனவரி 31 ஆம் தேதி விஜயவாடா அருகில் தேசிய நெடுஞ்சாலையில் காரில் வைத்து கொலை செய்யப்பட்டிருந்தார்.

இவ்வழக்கின் முக்கிய குற்றவாளியாக ராகேஷ் ரெட்டி என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது காமெடி நடிகர் சூர்யா பிரசாத், அவரின் உதவியாளர் கிஷோர் மற்றும் அஞ்சி ரெட்டி கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் கைதாகியிருப்பதும் தெலுங்கு சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.