421038-ajay-jayaram-ply-700ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியா வீரர் அஜய் ஜெயராம் 21-18, 21-19 என்ற நேர் செட் கணக்கில் சீனாவின் ஹுயாங் யூக்ஸியாங்கையும், சமீர் வர்மா 19-21, 21-15, 21-11 என்ற செட் கணக்கில் ஜப்பான் வீரர் கஸுமாஸா சகாயையும் தோற்கடித்தனர். காலிறுதியில் ஜெயராம், ஹாங்காங்வீரர் லாங் ஆக்னஸுடனும் சமீர் வர்மா, மலேசியாவின் சாங் வெய் பெங் உடனும் மோதவுள்ளனர். ஆனால் எச்.எஸ்.பிரணாய் 21-15, 11-21, 15-21 என்ற செட் கணக்கில் மலேசியா வீரர் சாங் வெய் பெங்கிடம் தோல்வியடைந்து போட்டியில் இருந்து வெளியேறினார்.