ஜெயஸ்ரீக்கும் மகாலட்சுமியின் கணவருக்கும் இடையே தான் கள்ளத்தொடர்பு : ஈஸ்வர்

தேவதையை கண்டேன்’ சீரியல் ஈஸ்வர் மற்றும் ’வம்சம்’ சீரியல் வில்லி நடிகை ஜெயஸ்ரீயும், கடந்த சில வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்கள். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில், ’தேவதையை கண்டேன்’ சீரியலில் வில்லியாக நடித்து வரும் நடிகை மகாலஷ்மியுடன் காதலாகி ஜெயஸ்ரீயிடம் விவாகரத்து கேட்டு ஈஸ்வர் சண்டைபோட்டு வந்துள்ளார் என ஜெயஸ்ரீ போலீசில் புகார் அளித்ததை தொடர்ந்து ஈஸ்வரையும், அவரது அம்மாவையும் போலீசார் கைது செய்துள்ளனர். பிறகு அவரது அம்மாவை ஜாமீனில் விடுவித்த போலீசார், ஈஸ்வரை மட்டும் சிறையில் அடைத்திருந்தனர் .

தற்போது ஈஸ்வர் ரகுநாத் ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.ஜெயஸ்ரீ கூறியது போன்று எனக்கும், நடிகை மகாலட்சுமிக்கும் இடையே கள்ளத்தொடர்பு எல்லாம் இல்லை. ஜெயஸ்ரீக்கும், மகாலட்சுமியின் கணவருக்கும் இடையே தான் தொடர்பு உள்ளது.அவர்கள் சேர்ந்து மது அருந்திய போது எடுத்த புகைப்படங்கள் என்னிடம் உள்ளது.

ஏற்கனவே விவாகரத்து பெற்று பெண் குழந்தையுடன் என் வீட்டிற்கு வந்தார் ஜெயஸ்ரீ . நான் அவரை காதலித்து தான் திருமணம் செய்தேன். குடிபோதையில் அந்த குழந்தையிடம் தவறாக நடந்ததாக அவதூறு பரப்புகிறார் ஜெயஸ்ரீ எனக்கு குடிப் பழக்கமோ, போதைப் பழக்கமோ இல்லை.

ஜெயஸ்ரீ. தற்போதும் பணத்திற்காகவே என் மீது பழி போடுகிறார். ஜெயஸ்ரீ, மகாலட்சுமியின் கணவர் இடையே இருக்கும் உறவுக்கான ஆதராங்களை வெளியிடுவேன் என்று ஈஸ்வர் கூறியுள்ளார்.

மேலும் உண்மை என்னவென்பதை தெரிந்து கொள்ளாமல் யாரும் பேச வேண்டாம் என்று ஃபேஸ்புக்கிலும் தெரிவித்துள்ளார் ஈஸ்வர்.

ஆனால் ஈஸ்வர், மகாலட்சுமி இடையே தொடர்பு இருப்பதாக அவருடன் சேர்ந்து பணியாற்றுபவர்கள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.