டில்லி

ளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஐக்கிய ஜனதா தளம் குஜராத் தேர்தல் தேதி அறிவிப்பு தாமதத்தை கண்டித்துள்ளது.

கடந்த வியாழன் அன்று தேர்தல் ஆணையம் ஹிமாசல பிரதேச தேர்தல் அட்டவணையை வெளியிட்டது.   அதே காலகட்டத்தில் முடிவுக்கு வரும் குஜராத் சட்டசபை தேர்தல் பற்றி எதுவும் அறிவிக்கவில்லை.   இது வரை இரு மாநிலங்களுக்கும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெற்று வந்துள்ளது.  ஒரே ஒரு முறை அதாவது 2002 ஆம் வருடம் மட்டும் குஜராத் வன்முறை காரணமாக வெவ்வேறு கால கட்டத்தில் தேர்தல் நடந்தது.

இந்த தேர்தல் தேதி அறிவிக்காததற்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தன. இந்த தேர்தல் தேதி அறிவிப்பு தாமதத்தை பயன்படுத்தி பல கோடி ரூபாய் நலத்திட்டங்கள் குஜராத் அரசு அறிவித்துள்ளதாக காங்கிரஸ் செய்தியாளர் அபிஷேக் சிங்க்வி தெரிவித்தார்.  அதே நேரத்தில் குஜராத் மாநில பா ஜ க முதல்வர் விஜய் ரூபானி அதற்கு பதில் அளிக்கும் வகையில் 2012 தேர்தலில் தேர்தல் ஆணையத்தின் உதவியுடன் பல நலதிட்டங்களை அப்போதைய காங்கிரஸ் அரசு அறிவித்தாக குற்றம் சாட்டினார்.  ஆனால் தேர்தல் ஆணையர் சம்பத் அதை மறுத்துள்ளார்.

இந்நிலையில் மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளத் தேசிய செயலாளர் பவன் வர்மா நேற்று தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு செய்தி வெளியுட்டுள்ளார். அதில், “தேர்தல் ஆணையம் பாரபட்சமின்றி நடக்கவேண்டும் என எதிர்பார்ப்புகள் உள்ளது.  ஆனால் உண்மையில் அப்படி இல்லை.  குஜராத் தேர்தல் தேதிகள் ஏன் இன்னும் அறிவிக்கப்படவில்லை.  எங்களுக்கு சரியான விடைகள் தேவை” என கூறப்பட்டுள்ளது.

ஐக்கிய ஜனதா தளம் ஆளும் பா ஜ கவின் தேசிய ஜனநாயக் கூட்டணியில் அங்கம் வகிப்பதுடன் குஜராத் சட்டமன்ற தேர்தலிலும் பா ஜ க வுடன் கூட்டணியை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.