தேவகவுடா வீடு முன்பு தொண்டர்கள் கூட்டம

பெங்களூரு:

ர்நாடக சட்டமன்ற தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், கவர்னரை சந்திக்க நேரம் ஒதுக்கக்கோரி ஜேடிஎஸ் தலைவர் எச்.டி.குமாரசாமி கடிதம் அனுப்பி உள்ளார்.

கர்நாடக தேர்தல் வாக்குகள் எண்ணிக்கை இன்னும் முற்றுபெறாத நிலையில் இன்று மாலை 5.30 மணி முதல் 6 மணிக்குள் கவர்னரை சந்திக்க நேரம் ஒதுக்க கோரி மதசார்பற்ற ஜனதா தளம் தலைவர குமாரசாமி கடிதம் எழுதி உள்ளார்.

 

வாக்கு எண்ணிக்கை இன்னும் முற்றுப்பெறாத நிலையில், பாஜக பின்னோக்கி வந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில்,  கர்நாடகாவில் பாஜ ஆட்சியை அமையவிடக்கூடாது என்பதில் தீவிரமாக செயல்பட்டு வரும் காங்கிரஸ், தனது ஆதரவை ஜேடிஎஸ் கட்சிக்கு வழங்கி உள்ளது.

கவர்னருக்கு குமாரசாமி எழுதி உள்ள கடிதம்

இரு கட்சி தலைவர்களுக்கிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையை தொடர்ந்து குமாரசாமி முதல்வராவார் என்றும், கூட்டணி மந்திரி சபை அமைக்கப்பட இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி வருகிறது.

இந்நிலையில், இன்று மாலை கவர்னர் வாஜுபாய்  ருதபாய் பாலா  சந்திக்க நேரம் ஒதுக்கக்கோரி ஜேடிஎஸ் தலைவர் குமாரசாமி கடிதம் எழுதி உள்ளார்.

காங்கிரஸ் ஆதரவுடன் குமாரசாமி தலைமையில் ஆட்சி அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில் அவரது வீட்டு முன்பு அவரது ஆதரவாளர்கள் திரண்டு வருகின்றனர்.