பெங்களூரு:

பாரதியஜனதா அரசுக்கு எதிராக, பிராந்திய கட்சிகள் அனைத்தும் காங்கிரஸ் கட்சியுடன் கைகோர்க்க வேண்டும் என்று அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் ஜேடிஎஸ் தலைவர் தேவகவுடா அழைப்பு விடுத்துள்ளார்.

மதசார்பற்ற ஜனதாதளம் கட்சி தலைவரும், முன்னாள் பிரதமருமான எச். டி. தேவேகவுடா அனைத்து பிராந்திய கட்சிகள் மற்றும் மதச்சார்பற்ற கட்சிகள் காங்கிரஸுடன் கைகோர்த்து, பாஜகவை  வீழ்த்துவதற்கு இணைந்து செயல்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.

ஜே.டி (எஸ்)  சார்பில் ஹசன் மாவட்டத்தில் கட்சி ஏற்பாடு செய்த பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கட்சித் தலைவர் தேவகவுடா பேசியதாவது,

தற்போதைய நிலையில், மத்திய பாஜக அரசு மக்கள் விரோத நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதை தடுக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். மதச்சார்பற்ற கட்சிகள் நாட்டில் அரசியல் ரீதியாக தங்கள் பலத்தை அதிகரிக்க வேண்டும் என்றவர், நாம் அனைவரும்  காங்கிரசுடன் ஒன்றிணைந்து கிடைக்கக்கூடிய பலத்துடன் இணைந்து செயல்பட வேண்டும், அப்போதுதான் அவர்களை (பிஜேபி) தடுக்க முடியும்” என்றார்.

“சிறு மற்றும் பிராந்திய கட்சிகள் டாக்டர் பி ஆர் அம்பேத்கர் நாட்டிற்கு வழங்கிய அதிகாரங்களை பயன்படுத்தாவிட்டால், அவை (பாஜக) அவற்றை காலி செய்துவிடும்,” என்று  எச்சரித்தவர், காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து செயல்படுவோம் என்று கூறினார்.