கர்நாடக தேர்தலில் வெற்றி பெற சுவாமி நிர்மலானந்தநாதாவிடம் ஆசி பெற்றார் குமாரசாமி

சாமியாருடன் குமாரசாமி

பெங்களூரு:

ர்நாடக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 9 மணி வரை 10 சதவிகித வாக்குகள் பதிவாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பாரதியஜனதாவுக்கு மாற்று சக்தியாக விளங்கும் மதசார்பற்ற ஜனதா கட்சி தலைவர் குமாரசாமி வாக்களிக்கும் முன் இன்று காலை பெங்களூர் ஜெயநகர் பகுதியில் உள்ள  ஸ்ரீ ஆதிச்சஞ்சனகிரி மஹாசமஸ்தானா மடம் (Adichunchanagiri Mahasamsthana Math) சென்றார்.

அங்கு சாமியார் நிர்மலானந்தாநாதாவை சந்தித்து பேசினார். குமாரசாமி வெற்றி பெற சாமிஜி வாழ்த்து தெரிவித்ததாக கூறப்படுகிறது.

ஏற்கனவே ஒருவர் கோ பூஜை நடத்தி வெற்றிபெற  முயற்சி மேற்கொள்கிறார், மற்றொருவர் கோவிலுக்கு சென்று வெற்றி பெற அப்ளிக்கேஷன் போட்டுள்ளார், தற்போது குமாரசாமி சாமியாரை சந்தித்து வெற்றி பெற ஆசி பெற்றுள்ளார்…

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: JDS's HD Kumaraswamy meets Nirmalanandanatha Mahaswami of Sri Adichunchanagiri Mahasamsthana Math in Jayanagar, karnataka, கர்நாடக தேர்தலில் வெற்றி பெற சுவாமி நிர்மலானந்தநாதாவிடம் ஆசி பெற்றார் குமாரசாமி
-=-