பீகாரில் கூட்டணி  – ஜார்க்கண்டில் எதிரணி : ஐக்கிய ஜனதா தளம் – பாஜக

பாட்னா

பீகாரில் பாஜகவுடன் கூட்டணி ஆட்சி செய்யும் ஜனதா தளம் ஜார்க்கண்டில் பாஜக வை எதிர்த்து போராட்டம் செய்கிறது.

பீகாரில் நிதிஷ் குமார் தலைமையில் பாஜக – ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.   இரு கட்சிகளும் அமைச்சரவையில் பங்கு பெற்றுள்ளது.   அதே நேரத்தில் பாஜக ஆளும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் இரு கட்சிகளுக்கும் இடையில் கூட்டணி இல்லை.

ஜார்கண்ட் மாநிலத்தில்  தாது வளங்கள் எக்கச்சக்கமாக உள்ளன.  அதே நேரத்தில் மக்களுக்கு அடிப்படை வசதிகளான சாலைகள், மின்சாரம் மற்றும் தண்ணீர் வசதி தேவையான அளவுக்கு கிடையாது.  அதனால் ஜார்க்கண்ட் மாநிலத்தை ஆளும் பாஜக அரசுக்கு எதிராக ஐக்கிய ஜனதா தளம் வரும் 25ஆம் தேதி  போராட்டம் நடத்த உள்ளது.

பீகார் முதல்வர் நிதிஷ்குமார், “ஜார்க்கண்ட் மாநிலத்தில் எந்தக் கட்சியுடனும்  எங்களுக்கு கூட்டணி இல்லை.  எனவே நாங்கள் ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள அனைத்து மக்களவை தொகுதிகளிலும் தனியே போட்டியிட எண்ணியுள்ளோம்.  இது இப்போதைய முடிவு.  எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை யாராலும் கூற முடியாது” என தெரிவித்துள்ளார்.

You may have missed