லாலுவின் கட்சிக்கு தாவுகிறார்களா நிதிஷ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள்?

பாட்னா: நிதிஷ்குமார் கட்சியின் 17 சட்டமன்ற உறுப்பினர்கள் எங்களுடன் தொடர்பில் இருக்கிறார்கள் என்று வெடியைக் கொளுத்திப் போட்டுள்ளார் ஆர்ஜேடி கட்சியின் தலைவர்களுள் ஒருவரான ஷியாம் ரஜாக்.

அவர், நிதிஷ் கட்சியில் துணைத் தலைவர் அந்தஸ்தில் இருந்து, சட்டமன்ற தேர்தல் சமயத்தில் லாலுவின் கட்சிக்கு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஷியாம் ரஜாக் கூறியுள்ளதாவது, “நிதிஷ் கட்சியின் 17 சட்டமன்ற உறுப்பினர்கள் வரை, எங்களுடன் தொடர்பில் இருந்து வருகின்றனர். அந்த எண்ணிக்கை விரைவில் 28 என்பதாக அதிகரிக்கலாம்.

எங்கள் தலைவர் தேஜஸ்வி யாதவ், முதல்வர் ஆவதை ஐக்கிய ஜனதாதளம் மற்றும் பாஜக கூட்டணியினர், தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி தடுத்து விட்டனர்” என்றுள்ளார்.

ஷியாம் ரஜாக்கின் கருத்தை மறுத்துள்ள நிதிஷ்குமார், “ஆதாரமற்ற தகவலை ஷியாம் தந்து வருகிறார். அவர் சொல்வதில் எந்த உண்மையும் இல்லை” என்றுள்ளார்.

 

 

You may have missed