ஜேஇஇ தேர்வு முடிவு இன்று வெளியீடு….?


டில்லி:

த்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களின் சேர்க்கைக்கான ஒருங்கிணைந்த நுழைவுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்வு முடிவுகளை www.jeemain.nic.in,  Cbseresults.nic.in என்ற  இணையதளங்களில் பார்த்து அறிந்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐஐடி, ஐஐஎஸ்சி போன்ற மத்திய உயர் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெறுவதற்கான ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வின் (ஜே.இ.இ.) முதல்நிலைத் தேர்வு  கடந்த ஏப்ரல் மாதம் 8ந்தேதி நாடு முழுழவதும் நடைபெற்றது.

இரண்டு கட்டங்களாக நடத்தப்படும். முதலில் முதல் நிலைத் தேர்வு, பின்னர் முதன்மைத் தேர்வு (அட்வான்ஸ்டு) நடத்தப்படும். முதல்நிலைத் தேர்வில் தகுதி பெறுபவர்கள் என்.ஐ.டி. போன்ற மத்திய அரசுக் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற முடியும்.

முதல்நிலைத் தேர்வில் தகுதி பெறுபவர்களில் முதல் 1.5 லட்சம் பேர், அடுத்து நடத்தப்படும் ஜே.இ.இ. முதன்மைத் தேர்வில் பங்கேற்கும் தகுதியைப் பெறுவர்.

முதன்மைத் தேர்வில் தகுதி பெறுபவர்கள் நாடு முழுவதும் உள்ள ஐஐடி, ஐஐஎஸ்சி கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற முடியும்.

இந்த  ஆண்டுக்கான ஜே.இ.இ. முதல்நிலைத் தேர்வின் நேரடி எழுத்துத் தேர்வு நாடு முழுவதும் 258 மையங்களில் கடந்த  ஏப்ரல் மாதம் 8ந்தேதி ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது. இந்த தேர்வில் நாடு முழுவதும் இருந்து 10 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் பங்கு பெற்றனர்.

அதைத்தொடர்ந்து  ஏப்ரல் 15, 16 தேதிகளில் முதல்நிலைத் தேர்வுக்கான ஆன்-லைன் தேர்வு நடத்தப்பட்டது.

இந்நிலையில் இன்று ஜேஇஇ தேர்வு முடிவுகள்  வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.