டெல்லி: ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகள்   இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள து. இதில் 6 மாணாக்கர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களான   ஐஐடி, என்ஐடி போன்ற கல்வி நிறுவனத்தில் சேர ஜேஇஇ எனும் ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வு ஆண்டுக்கு 4 முறை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பு ஆண்டின் முதல்தேர்வு கடந்த  பிப்ரவரி 23-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை நடைபெற்றது. கொரோனா தொற்றுக்கு கடுமையான முன்னெச்சரிக்கைகள் மற்றும் சமூக இடைவெளி நடவடிக்கைகளுடன் நடத்தப்பட்டது.

இந்த தேர்வின் முடிவுகள் வெளியாகி உள்ளது.  மாணவர்கள் தங்கள் மதிப்பெண்ணை nta.ac.in, ntaresults.nic.in மற்றும் jeemain.nta.nic.in என்ற இணையதள பக்கத்தில் பார்வையிடலாம் எனவும் அறிவிக்கப்பட்டது.  இதில் 6 மாணவர்கள் 100 சதவிகித மதிப்பெண்களைப் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டதுள்ளது.

அதன்படி,   ராஜஸ்தானைச் சேர்ந்த சாகேத் ஜா, பிரவர் கட்டாரியா,  டெல்லியைச் சேர்ந்த ரஞ்சிம் பிரபால் தாஸ், சண்டிகரைச் சேர்ந்த குராம்ரித் சிங், மகாராஷ்டிராவைச் சேர்ந்த சித்தாந்த் முகர்ஜி, குஜராத்தைச் சேர்ந்த அனந்த் கிருஷ்ணா கிடாம்பி ஆகியோர் 100 சதவீதம் பெற்றுள்ளனர்.

பெண்கள் பிரிவில், 10 மாணவிகள் 99 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர்.