ஜேஇஇ முதன்மை தேர்வு விண்ணப்பத்திற்கு கால அவகாசம் 24ந்தேதி வரை நீட்டிப்பு… ரமேஷ் பொக்ரியால்

டெல்லி:

ஜேஇஇ முதன்மை தேர்வு விண்ணப்பத்திற்கு கால அவகாசம் மே மாதம் 24ந்தேதி வரை நீட்டிப்பு செய்யப்படுவதாக மத்திய அமைச்சர்  ரமேஷ் பொக்ரியால் தெரிவித்து உள்ளார்.

ஐஐடி போன்ற கல்வி நிறுவனங்களில் பொறியியல் உயர்கல்வி படிப்புகான ஜேஇஇ தேர்வுகள் இரு கட்டங்களாக நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி ஜேஇஇ மெயின், ஜெஇஇ முதுநிலை (அட்வான்ஸ்டு)  என  2 கட்டங்களாக நடைபெறுகிறது.

முதன்மை தேர்வு கொரோனா ஊரடங்கால் ஒத்தி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, சமீபத்தில் ஜேஇஇ முதன்மை தோவு ஜூலை 18-ஆம் தேதி முதல் ஜூலை 23-ஆம் தேதி வரை நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்தது.

இந்த நிலையில், ஜேஇஇ முதுநிலை தோவு ஆகஸ்ட் 23-ஆம் தேதி நடைபெறும் என்றும், ஜேஇஇ முதன்மை தேர்வுக்கு இன்று (மே 19)முதல் மே 24-ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.