உலகின் பணக்காரர் பட்டியலில் பில்கேட்ஸை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்த அமேசான் நிறுவனர்

சான்பிரான்சிஸ்கோ:

லகின் பணக்காரர் பட்டியலில் அமேசான் நிறுவனத்தின் முதலாளி  ஜெப் பெசோஸ் முதலிடத்தை பிடித்து உள்ளார். அவரது  சொத்து மதிப்பு 141.9 பில்லியன் டாலர் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

உலகம் முழுவதும் ஆன்லைன் வர்த்தகத்தில் கொடிகட்டி பறக்கும் அமேசான் நிறுவனத்தின், நிறுவனர் ஜெப் பெசோஸ் உலகின் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தை பிடித்திருப்பதாக போர்பஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டு உள்ளது.

1994ம் ஆண்டு அமேசான் நிறுவனத்தை தொடங்கிய ஜெப்பெசோஸின் தற்போதைய சொத்து மதிப்பு141.9 பில்லியன் டாலர் என்றும் அறிவித்து உள்ளது.

உலக பணக்காரர்கள்  பட்டியலில் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இந்த தடவை 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.  இவரது சொத்து மதிப்பு 92.9 பில்லியன் டாலர். நீண்ட காலமாக முதலிடத்தை பிடித்திருந்த பில்கேட்ஸ் இந்த ஆண்டு 2வது இடத்துக்கு வந்துள்ளார்.

தற்போது முதலிடத்தை பிடித்துள்ள அமேசான் நிறுகூனம்,  உலகின் மிகப்பெரிய வணிக நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 5 லட்சம் ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.

உலகின் மிகப்பெரிய மதிப்பு கொண்ட நிறுவனங்கள் பட்டியலில் ஆப்பிள் நிறுவனத்துக்கு  அடுத்த படியாக அமேசான் உள்ளது.

பிர்கேட்ஸை தொடர்ந்து, 3வது இடத்தை  பெர்னாட் அர்னால்ட் பிடித்துள்ளார். இவரது (சொத்து மதிப்பு 75.7 பில்லியன் டாலர்) வாரன் பப்பெட்4-வது இடத்தை பிடித்துள்ளார். சொத்து மதிப்பு 91.3 பில்லியன் டாலர். பேஸ்புக் நிறுனர் மார்க் ஷுகர்பெர்க் 5-வது இடம் பிடித்துள்ளார். இவரது சொத்து மதிப்பு 74.6 பில்லியன் டாலர்.

இந்திய பணக்காரர்களில் முதலிடத்திலும், ஆசிரியாவிலும் நம்பர் ஒன் இடத்தில்  உள்ள ரிலையன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானி உலகின் மிகப்பெரும் பணக்காரர்களின் பட்டியலில்  22-வது இடத்தில் இருக்கிறார். அவரது மொத்த சொத்து மதிப்பு 39.6 பில்லியன் டாலர்.

இவ்வாறு போர்பஸ் பத்திரிகை வெளியிட்டு உள்ளது.