மாற்று திறனாளிகளுக்கான உலக செஸ் போட்டி: தங்கம் வென்ற தமிழக வீராங்கனை ஜெனித்தா

திருச்சி:

சுலோவாக்கியா நாட்டில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான செஸ் போட்டியில் தமிழக வீராங்கனை ஜெனித்தா தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

மாற்றுத்திறனாளிகளுக்கான (ஊனமுற்றோர்) 19வது ஐபிசிஏ உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சுலோவாக்கியா நாட்டில் ருஷோம்பெர்க்கில் (Ruzomberok, Slovakia) கடந்த மாதம் 27ந்தேதி முதல் ஜலை 7ந்தேதி வரை நடைபெற்றது.

இந்த போட்டியில், தனிநபர் பிரிவில்  கலந்துகொண்ட  திருச்சி மாணவி ஜெனிதா தங்கதப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

ஜெனித்தா திருச்சி அருகே உள்ள பொன்மலைப்பட்டியை சேர்ந்தவர். இவரது தந்தையார் பெயர் காணிக்கை இருதயராஜ். இவர் ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியர்.

ஜெனித்தா  தொடர்ந்து 6-வது முறையாக தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.  ஜெனித்தாவுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

 

கார்ட்டூன் கேலரி