அமெரிக்க லெக்சிங்டன் ஓபன் டென்னிஸ் – ஜெனிபர் பிராடி சாம்பியன்!
லெக்சிங்டன்: அமெரிக்காவில் நடைபெற்ற லெக்சிங்டன் ஓபன் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் பிரிவில், அந்நாட்டு வீராங்கனை ஜெனிபர் பிராடி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.
இப்பிரிவின் இறுதிப்போட்டியில், சுவிஸ் நாட்டின் 23 வயது ஜில் டீம்சனுடன் மோதினார் 25 வயது ஜெனிபர் பிராடி.
இதில், முதல் செட் 6-3 என்ற கணக்கில் ஜெனிபர் வசம் சென்றது. பின்னர், இரண்டாவது செட்டையும் 6-4 என்ற கணக்கில் ஜெனிபரே வென்றார். இந்த வெற்றியின் மூலம் WTA(women’s tennis association) அரங்கில் தனது முதல் சாம்பியன் பட்டத்தை வென்றார்.
“எனக்கான முதல் பட்டத்தை, சொந்த நாட்டில் வென்றது மகிழ்ச்சி. தொடர்ந்து, பல பட்டங்களை வெல்ல விரும்புகிறேன்” என்றார் அவர்.