‘ஜெர்ஸி’ இந்தி ரீமேக்கின் படப்பிடிப்பு தொடக்கம்…..!

‘கபீர் சிங்’ தெலுங்கு ரீமேக்கில் பாலிவுட்டில் பிரம்மாண்ட வெற்றி பெற்றதால், மீண்டும் தெலுங்குப் படம் ‘ஜெர்ஸி’ படத்தின் ரீமேக்கில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் ஷாகித் கபூர்.

தெலுங்கில் இந்தப் படத்தை இயக்கிய கவுதமே இந்தியிலும் இயக்கவுள்ளார். அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 28-ம் தேதி இந்தப் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

‘ஜெர்ஸி’ இந்தி ரீமேக்கில் ஷாகித் கபூருடன் அவரது தந்தையும் மூத்த பாலிவுட் நடிகருமான பங்கஜ் கபூர் நடிக்க உள்ளார். இதர நடிகர்கள் யாரையும் படக்குழு இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.