அஹமதாபாத்:

குஜராத் மாநிலத்தில் 9வது வகுப்பு பாடப்புத்தகத்தில் கிறிஸ்து ஒரு பேய் என்று குறிப்பிடப் பட்டுள்ளது. இதற்கு அந்த மாநில கிறிஸ்தவ அமைப்புகள் போர்க்கொடி தூக்கி உள்ளது.

இந்த தவறுக்கு  அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கிறிஸ்தவ அமைப்புகள்  கோரிக்கை விடுத்து உள்ளது.

குஜராத் மாநில பள்ளி பாடநூல் வாரியத்தால் (GSSTB) வெளியிடப்பட்ட 9ம் வகுப்பு  இந்தி (இரண்டாவது மொழி) பாட புத்தகத்தில் இயேசு குறித்து சர்சையான வார்த்தை இடம்பெற்றுள்ளதாக  சர்ச்சை எழுந்துள்ளது.

அந்த புத்தகத்தில் உள்ள ‘பாரதீய சங்க்ரிதி மினி குரு-ஷிஷ்யா சாம்பந்த்’ (இந்திய கலாச்சாரத்தில் ஆசிரியர்-மாணவர் உறவு) என்கிற தலைப்பில் பாடம் 16ல் இயேசு கிறிஸ்து குறித்து சர்ச்சையான பதிவு உள்ளதாக கூறப்படுகிறது.

அதில்,  “Is sambandh me hevaan Isa ka ek kathan sada smaraniya hai என கூறப்பட்டுள்ளது.  அதாவது “பகவானை” (கடவுள்) என்ற வார்த்தைக்கு பதிலாக, இயேசு கிறிஸ்துவுக்கு முன், “ஹெவன்” (பிசாசு) என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக குஜரபாத்தில் கடும் சர்ச்சை எழுந்துள்ளது.  கிறிஸ்தவ அமைப்புகள்  குஜராத் மாநில பள்ளி பாடநூல் வாரியத்தின் மீது குற்றச்சாட்டுகளை கூறி ஆர்ப்பாட்டம் நடத்தியது.

மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகம் (DEO) அலுவலகத்திற்கு வெளியே கூடி, புத்தகத்தை திரும்பப் பெற வேண்டும் என்று கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இதுகுறித்து அரசின் கல்வித்துறைக்கும், டிஇஓவிடமும்  புகார் கூறியுள்ளதாக குஜராத் கத்தோலிக்க திருச்சபை வினாயக் ஜாதவ் கூறியுள்ளனர்.

மேலும், புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள வாசகம்,  எங்கள் கடவுளை ஒரு கெட்ட கடவுளாக சித்தரிக்கிறது, இயேசு கிறிஸ்து குறித்த தவறான  வார்த்தைக்கு நாங்கள் கண்டனம் செய்கிறோம், இது எங்கள் மத உணர்வுகளை காயப்படுத்தியுள்ளது, அரசாங்கம் உடனடியாக புத்தகத்தை திரும்பப் பெற வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து குஜராத் பாடநூல் நிறுவன தலைவர் கூறும்போது, இந்த தவறு அச்சு பிழை காரணமாக நடந்துள்ளது என்றும்,இந்த வாசகத்தை புத்தகத்தில் இருந்து நீக்க உத்தரவிட்டுள்ளதாகவும்  கூறி உள்ளார்.

பொதுவாக  கிறிஸ்தவர்கள் இந்துக்கள் வணங்கும் தெய்வெங்களை கல்  என்றும் பேய் என்றும் கூறி வருவதுபோல… குஜராத்தில் கிறிஸ்தவர்களின் கடவுளான இயேசுவை.. பேய் என்றும் அரக்கன் என்றும்  பாடநூலில் குறிப்பிட்டு சர்ச்சையை கிளப்பிவிட்டார்கள் போலும்….