இயேசு கிறிஸ்துவின் கல்லறை முதல் முறையாக திறப்பு

இயேசு கிறிஸ்துவை வைத்ததாக கருதப்படும் கல்லறை பல நூற்றாண்டுகளுக்கு பின்பு பராமரிப்பு பணிகளுக்காக மறுபடியும் திறக்கப்பட்டுள்ளது. கல்லறையின் மேல் இருந்த மார்பிள் கல் அகற்றப்பட்டு அதன்கீழ் இயேசுவின் உடல் கிடத்தப்பட்டதாக நம்பப்படும் கல்லை தற்போது அகழ்வாராய்ச்சியாளர்களும், பயணிகளும், பல்வேறு சமயக் குழுக்களும் பார்வையிட்டு வருகின்றனர். இந்த நிகழ்வை நேஷனல் ஜியோகிராபிக் பத்திரிக்கை பிரத்யேகமாக புகைப்படம் எடுத்து கட்டுரை எழுதியுள்ளது.

jesus_tomb

இயேசு மரித்து அடக்கம் செய்யப்பட்டு மூன்றாம் நாளில் அவர் உயிர்தெழுந்ததாகவும் அவர் கல்லறை காலியாக இருந்ததை அவரது சீடர்கள் பாத்ததாகவும் கி.பி முதல் நூற்றாண்டில் எழுதப்பட்ட சுவிசேஷ வேதாகமக் குறிப்புகள் கூறுகின்றன.

கி.பி 1808-லிருந்து 1810- ஆம் ஆண்டு காலகட்டத்துக்குள் தீ விபத்தில் பாதிக்கபட்ட இக்கல்லறை இப்போது மறுசீரமைக்கப்பட்டு வருகிறது.