கோவா:
ஓடுதளத்தில் இருந்து சருக்கிய ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் இருந்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
ஜெட் ஏர்வேஸ் விமானம் ஒன்று கோவா தபோலிம் விமானநிலையத்தில் இருந்து இன்று அதிகாலை 4.45 மணிக்கு 154 பயணிகள், 7 சிப்பந்திகளுடன் மும்பை நோக்கி புறப்பட தயாராக இருந்தது. விமானநிலையத்தில் இருந்து அனுமதி கிடைத்தவுடன் இந்த விமானம் ஓடுதள பாதைக்கு வந்து ஓட தயாரானது.
 

வேகமாக ஓட தொடங்கிய சிறிது நேரத்தில் ஓடுதளத்தில் இருந்து சருக்கி கீழே இறங்கி சிறிது தூரம் ஓடியது. விமானி விமானத்தை பிரேக் போட்டு நிறுத்தினார். விமானத்தின் மூன்று சக்கரங்களும் முழுவதும் மண்ணுக்குள் புதைந்துவிட்டது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 15 பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது.
அதிர்ஷ்டவசமாக அனைத்து பயணிகளும், சிப்பந்திகளும் உயிர் தப்பினர். காயமடைந்தவர்களுக்கு விமானநிலைய ஆணைம் சார்பில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த விபத்து காரணமாக சிறிது நேரம் விமானநிலையம் மூடப்பட்டது. பின்னர் வழக்கம் போல் இயங்க தொடங்கியது.