மிரட்டல் : ஜெட் ஏர்வேஸ் விமானம் அவசர அவசரமாக தரை இறக்கம்!

கமதாபாத்

மிரட்டல் காரணமாக மும்பைக்கு கிளம்பிய விமானம் அகமதாபாத்தில் தரை இறக்கப்பட்டுள்ளது.

ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று டில்லியில் இருந்து மும்பை நோக்கி சென்றுக் கொண்டிருந்தது.  இந்நிலையில் விமானத்துக்கு ஒரு மிரட்டல் வந்ததாக சொல்லப்படுகிறது.  முன்னெச்சரிக்கை காரணமாக அகமதாபாத்துக்கு அந்த விமானம் திருப்பி விடப்பட்டு இன்று அதிகாலை அவசர அவசரமாக தரை இறக்கப்பட்டுள்ளது.

அந்த விமானத்தில் பயணித்த அனைத்து பயணிகள், ஊழியர்கள் மற்றும் விமானம் முழுவதும் விமான பாதுகாப்புப் படையினர் சோதித்து வருகின்றனர்.   ஒரு அனாமதேய தொலைபேசி அழைப்பினால் விமானம் தரை இறக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  மேற்கொண்டு எந்த விவரமும் தெரிவிக்க மறுத்து விட்டனர்.   மேலும் ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனமும் இது குறித்து எந்த தகவலும் தெரிவிக்க மறுத்து விட்டது.