மும்பை:

ப்ரல் 1 முதல் திட்டமிட்டபடி வேலைநிறுத்தம் நடைபெறும் என்று ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள், விமானிகள் அறிவித்து உள்ளனர்.

நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனம் தனது ஊழியர்கள், விமானிகளுக்கு கடந்த சில மாதங்களாக ஊதியம் வழங்க முடியாமல் தவித்து வருகிறது.  தற்போதுவரை சுமார் ரூ.6,500 கோடிக்கு மேல் கடன் சுமை அதிகரித்ததால் நிறுவனத்தின் அன்றாட அலுவல்களை நடத்துவதிலேயே  பெரும் சிரமத்தை எதிர்கொண்டது. இதற்கிடையில்,  பாரத ஸ்டேட் வங்கியிடமிருந்து கடன் பெற்று விமானிகளுக்கு ஊதியம் வழங்க திட்டமிட்டு  நினைத்த திட்டம் நிறைவேறவில்லை.

இதன் காரணமாக ஏர்வேஸ் நிறுவனத்தை சீர் செய்ய நிர்வாக இயக்குனர் நரேஷ் கோயல், அவர் மனைவி மற்றும் இருவர் பதவி விலகினர். ஜெட் ஏர்வேஸின் நிர்வாகக் குழு முற்றிலுமாக மாற்றியமைக்கப்பட உள்ளது.

இந்த நிலையில், ஜெட் ஏர்வேஸ் விமான ஊழியர்களும் விமானிகளும் ஏற்கனவே அறிவித்தபடி, ஏப்ரல் 1ந்தேதியில் இருந்து வேலை நிறுத்தத்தை தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளனர். இதன் காரணமாக ஜெட் ஏர்வேஸ் விமான போக்குவரத்து முடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.