டில்லி

ஜெட் ஏர்வேஸ் விமான சேவை நிறுவனம் தனது சேவைகளை முழுமையாக நிறுத்திக் கொண்டுள்ளது.

நிதி நெருக்கடியால் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தனது பல சேவைகளை ரத்து செய்தது. இந்த நிறுவனத்துக்கு ரூ.1500 கோடிக்கு மேல் கடன் கொடுத்துள்ள பாரத ஸ்டேட் வங்கி இந்த நிறுவன பங்குகளை விற்று நிறுவனம் தொடர்ந்து நடக்க முயன்று வருகிறது. ஆனால் இந்த பங்குகளுக்கு சரியான விலை கிடைக்காததால் அந்த முயற்சியில் தடை ஏற்பட்டுள்ளது.

நிர்வாக செலவுகள் மற்றும் ஊதிய பாக்கிகளுக்காக பாரத ஸ்டேட் வங்கி மேலும் நிதி உதவி அளிக்க வேண்டும் என விமானிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் மேற்கொண்டு நிதி அளிக்க பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட அனைத்து கடன் அளித்தவர்களும் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இதனால் நிர்வாகம் எற்கனவே நடத்தி வரும் சேவைகளையும் நடத்த இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.  இந்நிலையில் ஜெட் ஏர்வேஸ் இன்று இரவுடன் தனது சேவைகள் அனைத்தையும் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது. சேவைகள் மீண்டும் எப்போது தொடங்கும் என்பது குறித்து நிறுவனம் எதுவும் தெரிவிக்கவில்லை