டில்லி

விமான எரிபொருளின் விலை பெட்ரோல் மற்றும் டீசலை விட  குறைவாக உள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்ததை ஒட்டி பெட்ரோல் மற்றும் டீச்சலின் விலைகள் கடந்த அக்டோபர் மாதம் 18 ஆம் தேதியில் இருந்து படிப்படியாக குறைந்து வருகின்றன. இதுவரை பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.14.18ம் டீசல் விலை லிட்டருக்கு ரூ.13.03ம் குறைந்துள்ளது. இன்று டில்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.68.65 எனவும் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.62.66 எனவும் உள்ளது.

கச்சா எண்ணெயின் விலைக் குறைவு விமான எரிபொருள் விலையையும் குறைத்துள்ளது. இது வரை இந்த எரிபொருளின் விலை இரு முறை குறைக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் 1 ஆம் தேதி இந்த விலையில் 10.9% குறைக்கப்பட்டது. அதாவது கிலோ லிட்டருக்கு ரூ.8327.83 விலை குறைக்கப்பட்டது. தற்போது மேலும் 14.7% விலை அதாவது கிலோ லிட்டருக்கு ரு. 9990 விலை குறைக்கப்பட்டுள்ளது.

தற்போது விமான எரிபொருள் விலை கிலோ லிட்டருக்கு ரூ. 58,60.97 ஆக உள்ளது. இது இன்றைய பெட்ரொல் மற்றும் டீசல் விலையை விடவே குறைவாகும். தற்போதைய நிலையில் டில்லியில் வெளிச்சந்தையில் மண்ணெண்ணெய் லிட்டருக்கு ரூ.56.69 க்கு விற்கப்படுகிறது. விமான எரிபொருள் அந்த மண்ணெண்ணெயை விட சற்றே விலை உயர்வாக உள்ளது.