Random image

மெகுல் சோக்சி :  97%  மதிப்பு ஏற்றப்பட்டு காட்டப்பட்டுள்ள நகைகள்

மும்பை

ஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி வழக்கில் கைப்பற்றப்பட்டுள்ள மெகுல் சோக்சியின் நிறுவன நகைகள் புத்தக மதிப்பில் 3% மட்டுமே உள்ளதாக தெரிய வந்துள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல்லாயிரம் கோடிக் கணக்கான ரூபாய் மோசடி செய்த நிரவ் மோடியும் அவர் கூட்டாளி மெகுல் சோக்சியும் நாட்டை விட்டு குடும்பத்துடன் ஓடி விட்டனர்.   அவர்களை பிடிக்க சிபிஐ முயற்சி செய்து வருகிறது.   அத்துடன் நிரவ் மோடி மீது சர்வதேச காவல்துறை ரெட் அலெர்ட் நோட்டிஸ் அளித்துள்ளது.

மெகுல் சோக்சியின் நிறுவனமான ஐதராபாத் ஜெம்ஸ் லிமிடெட் இல் இருந்து நகைகள் கைப்பற்றப் பட்டுள்ளது.    அவற்றின் புத்தக மதிப்பு ரூ. 3840 கோடி என குறிப்பிடப்பட்டிருந்தது.    இந்நகைகளை கைப்பற்றிய சிபிஐ அவைகளை அமலாக்கப்பிரிவிடம் ஒப்படைத்தது.   அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் தனியார் மூலம் இந்நகைகளை மதிப்பீடு செய்தனர்.

அப்போது கைப்பற்றப் பட்ட நகைகளின் மொத்த மதிப்பு ரூ.103 கோடி மட்டுமே என கண்டறியப்பட்டுள்ளது.   அதாவது புத்தக மதிப்பில் உள்ளதைப் போல 3% நகைகள் மட்டுமே உள்ளதாகவும் அந்த நகைகளின் மதிப்பு 97% உயர்த்தி புத்தக்கங்களில் காட்டப்பட்டுள்ளதகவும் தெரிய வந்துள்ளது.

இதே போல நிரவ் மோடியின் கீதாஞ்சலி குழும நகைக்கடைகளில் உள்ள நகைகளின் உண்மையான மதிப்பு புத்தக மதிப்பை விட குறைவாகவே உள்ளது.   உதரணமாக மும்பையில் உள்ள பாரத் டைமண்ட் நகைக்கடையில் ரூ.450 கோடி மதிப்புள்ள நகைகள் என குறிப்பிட்ப் பட்ட நகைகளின் உண்மை மதிப்பு ரூ.120 கோடியாக மட்டுமே உள்ளது.