முன்னாள் அமைச்சர்  ப சிதம்பரம் வீட்டில் கோடிக்கணக்கில் நகை கொள்ளை

சென்னை

காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரம் வீட்டில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளன.

முன்னாள் அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப. சிதம்பரத்தின் வீடு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ளது.    இவர் பரம்பரை பணக்காரர் ஆவார்.   இவர் வீட்டில் அந்தக் காலத்து நகைகள் ஏராளமாக உள்ளது.    அவை முத்து, மரகதம்,   மாணிகம் போன்ற விலையுயர்ந்த கற்கள் பதித்த புராதன நகைகள் ஆகும்.

இத்தகைய நகைகளும் ரூ. 15 லட்சம் ரொக்கப் பணமும் காணாமல் போய் விட்டதாக முன்னாள் அமைச்சர் ப சிதம்பரம் வீட்டில் இருந்து காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்டுளது.    இந்த நகைகளின் மதிப்பு பல கோடி ரூபாய்கள் என கூறப்படுகிறது.

இவர்கள் வீட்டில் ஒருவர் பணிப்பெண்ணாக வேலை பார்த்துள்ளார்.   அந்த புகாரில் இந்த கொள்ளை தொடர்பாக  அந்தப் பணிப்பெண் மேல் சந்தேகம் உள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ள்ளன.