ப்பல்லோ மருத்துவமனையில் ஜெ. சிகிச்சை பெற்ற வீடியோ என்று,  இன்று காலை  டிடிவி தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் ஒரு வீடியோ காட்சியை வெளியிட்டார்.

நாளை ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் இன்று வீடியோ வெளியிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..

அந்த வீடியோவில் ஜெ. மருத்துவமனையில் ஜூஸ் சாப்பிடும் காட்சி வெளியானது. அப்போது, ஜெ. டிவியில் முதல் மரியாதை படம் ஓடிக்கொண்டிருப்பதுபோன்ற காட்சியின் இசை வெளியாகிறது.

இந்நிலையில்,  அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. தரப்பில் தேர்தல் ஆணையத்திடம் இது குறித்து புகார் தெரிவிக்கப்பட்டதாகவும், இந்த நேரத்தில் வீடியோவை வெளியிடக்கூடாது என்று தினகரன் தரப்புக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.