மனித ஒழுக்கத்தை வலியுறுத்தும் ஜெய்ஆகாஷின் ‘தனயன்’

ஜெய்பாலாஜி மூவி மேக்கர்ஸ், ஜெயா பிலிம்ஸ், மேஸ்னர் புரொடக்‌ஷன்ஸ் ஹவுஸ் இணைந்து பெரும் பொருட்செலவில் தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளில் தயாராகும் படம் ‘தனயன்’.

தனயன் என்றால் மகன் என்று பொருள். ஒரு மகன் எப்படி வாழ வேண்டும் எனவும், ஒரு மகன் எப்படி வாழ கூடாது எனவும் இரு வேடங்களில் ‘ராமகிருஷ்ணா’ புகழ் ஜெய் ஆகாஷ் நடிக்க, கதாநாயகிகளாக ஆர்த்தி சுரேஷ், கவிதா சேட்டர்ஜி, குஷி முகர்ஜி, ஆகியோருடன் சாம்ஸ், பவர்ஸ்டார், தினேஷ் மேட்னே மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.

75 சதவிகிதம் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இறுதிகட்ட படப்பிடிப்பு பெங்களூரில் நடைபெற இருக்கிறது. இப்படத்தில் 3 சண்டை காட்சிகள், 4 பாடல்கள் இடம் பெற்றிருக்கின்றன.

மேலும் இதன் படப்பிடிப்பு சென்னை, ஐதராபாத் ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை தேவராஜ் ஒளிப்பதிவு செய்ய, U.K.முரளியின் அருமையான இசையில், M.தியாகராஜ் இயக்கி வருகிறார்.  நடனம் – ரமேஷ் ரெட்டி ,ரமேஷ் கமல்  மக்கள் தொடர்பு  – செல்வரகு

Leave a Reply

Your email address will not be published.