சென்னை,

றைந்த முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோவில் சிகிச்சை பெற்று வந்த வீடியோவை டிடிவி தினகரன் இன்று வெளியிட்டார்.

நாளை ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் இன்று வீடியோ வெளியிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜெயலலிதா அப்போலோவில் சிகிச்சை பெற்ற வீடியோவை டிடிவி தினகரன் தரப்பு வெளியிட்டது.

அந்த வீடியோவில் ஜெ. மருத்துவமனையில் ஜூஸ் சாப்பிடும் காட்சி வெளியானது. அப்போது, ஜெ. டிவியில் முதல் மரியாதை படம் ஓடிக்கொண்டிருப்பதுபோன்ற காட்சியின் இசை வெளியாகிறது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோவில் கடந்த ஆண்டு செப்டம்பர் 22ந்தேதி அனுமதிக்கப்பட்டு டிசம்பர் 5ந்தேதி மரணமடைந்தார். அவரது சிகிச்சை குறித்து பல்வேறு சர்ச்சை கள் எழுந்தபோது, அவர் சிகிச்சை பெற்று வரும் படத்தை வெளியிட அரசியல் கட்சியினர் மட்டுமின்றி பொதுமக்களும் கோரி வந்தனர்.

அப்போது சசிகலா குடும்பத்தினர் மற்றும் அமைச்சர்கள் மட்டுமின்றி அப்பல்லோ நிர்வாகமும், ஜெ. சிகிச்சை பெறுவது குறித்து படமோ, வீடியோவோ பதிவு செய்யப்படவில்லை என்று கூறியது.

இந்நிலையில், தற்போது ஜெயலலிதா மறைந்து 1 வருடம் ஆக இருக்கும் நிலையில், சமீபத்தில், அவர் சிகிச்சை பெற்ற வீடியோ பதிவான சி.சி.டி.வி காட்சிகள் உள்ளன இருப்பதாக டிடிவி தினகரன் கூறி இருந்தார்.

ஆனால் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் 70 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்றபோது,  ஜெயலலிதாவை எந்தவித புகைப்படமோ, வீடியோவோ எடுக்கவில்லை என்று அப்பலோ மருத்துவமனை நிர்வாகம் கூறியது.

அதேபோல  ஜெயலலிதா சிகிச்சையின் போது எடுக்கப்பட்ட வீடியோவோ, புகைப்படமோ தங்களிடம் இல்லை என்று தமிழக அரசும் தெரிவித்தது.

இந்நிலையில், ஜெயலலிதாவின் சிகிச்சையின் போது பதிவான சி.சி.டி.வி காட்சிகள் தங்களிடம் இருப்பதாக தினகரன் கூறி இருந்த நிலையில்,

நாளை ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் நடை பெற உள்ள நிலையில், டிடிவி தரப்பு வெற்றிவேல் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்

இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

[embedyt] https://www.youtube.com/watch?v=NptA7gumpCY[/embedyt]