சென்னை,

ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில், மருத்துவர் சுதாசேஷையன் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே  திமுகவைச் சேர்ந்த மருத்துவர் சரவணன், அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர், அரசு மருத்துவர்கள், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, அவரது சகோதரர் தீபக், தீபாவின் கணவர் மாதவன், ஜெயலலிதாவின் உறவினர்கள், ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் ஆகியோர் விசாரணை ஆணையத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளித்துள்ளனர்.

அதைத்தொடர்ந்து முன்னாள் தலைமை செயலாளர்கள் ராம மோகன ராவ், ஷீலா பாலகிருஷ்ணன் ஆகியோரும் நேரில் ஆஜராகி விளக்கமளித்தனர். பின்னர் அப்பல்லோ குழும தலைவர் பிரதாப் ரெட்டி மற்றும் சசிகலா, அவரது குடும்பத்தை சேர்ந்த சிலருக்கும் சம்மன் அனுப்பட்டது.

அதைத்தொடர்ந்து நேற்று, இளவரசியின் மகள் கிருஷ்ணப்பிரியா நேற்று விசாரணை ஆணையத்தில்  நேரில் ஆஜராகி விளக்கம் கூறினார்.

இந்நிலையில், இன்று மருத்துவர் சுதா சேஷையனிடம் விசாரணை நடைபெற்றது.

விசாரணை முடிந்ததும் வெளியே வந்த டாக்ர் சுதா சேசையன்,  டிசம்பர் 5 ஆம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் 20 நிமிடங்களில் ஜெயலலிதாவின் உடலுக்கு எம்பாமிங் பணி நிறைவடைந்தது. இதைத்தான் நான் விசாரணை ஆணையத்திடம் தெரிவித்தேன் என்று கூறினார்.

இவர் ஏற்கனவே கூறும்போது,  “ ஜெயலலிதாவின் உடல் பதப்படுத்தப்பட்டது உண்மைதான். அவர் மரண மடைந்த பிறகு, 5-ந் தேதி இரவு  12.20 மணிக்கு பதப்படுத்தப்பட்டது என்றும், அவரது கன்னத்தில்  எந்தவிதமான ஓட்டைகளையும் தான் பார்க்கவில்லை என்றும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அவருடைய பேட்டி – ஏற்கனவே வெளியான செய்தி link

ஜெ., உடல் பதப்படுத்தப்பட்டது உண்மைதான்: டாக்டர் சுதா சேஷய்யன்