கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி ஜெயலலிதா மயக்கமுற்ற நிலையில், மூச்சுத்திணறல் உள்ள நிலையில் நினைவு இழந்தவராக அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தகவல் வந்தது.

இதயைடுத்து மருத்துவமனைக்குச் சென்றேன்.

போயஸ் கார்டனில் ஜெயலலிதாவுக்கு என்ன நடந்திருக்கும் என்பதை யோசித்தேன். மறுநாள்  நாள் காலையில் செய்தித்தாள்களை பார்த்தேன்.

ஜெயலலிதா மன அழுத்தத்துடன் இருந்ததாகவும், அன்று வீட்டில் இருந்தவர்களுடன் வாக்குவாதம் நடந்ததாகவும், அது  கைகலப்பில் முடிந்ததாகவும் செய்தி வந்திருந்தது.  கீழே தள்ளிவிடப்பட்ட ஜெயலலிதா தன்னை தூக்கிவிடும்படி  அவர் கேட்டபோது யாருமே தூக்க முன்வரவில்லை என்ற செய்தியும் செய்தித்தாள்களில்  பார்த்தேன்.

என்னைப்போன்ற மூத்த வழக்கறிஞர்கள் கிரிமினல் சட்டத்தை படித்தவர்களுக்கு, முன்னதாக என்ன நடந்திருக்கும் என்ற சிந்தனை வரும்.

எனக்குத் தோன்றுவது இதுதான். வீட்டியேலே ஜெயலலிதாவை வைத்திருந்து அங்கே அசம்பாவிதம் நடந்துவிட்டது என்றால் தங்கள் மீது குற்றச்சாட்டு வரும் என்பதற்காக மருத்துவமனைக்குச் கொண்டு சென்றிருக்கிறார்கள்” என்று பி.ஹெச். பாண்டியன் தெரிவித்தார்.

ஆகவே மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, ஜெயலலிதா உயிருடன் இருந்தாரா என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது.