ஜெ.மரணம் குறித்த டாக்டர்கள் பேட்டி ஒரு ‘செட்டப்’! ஜெ.தீபா

சென்னை,

ன்று செய்தியாளர்களிடம் பேசிய ஜெயலலிதாவின் அண்ணன் மகளான ஜெ.தீபா, சசிகலா முதல்வராவதை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று கூறினார்.

மேலும், ஜெயலலிதா மரணம் குறித்து நேற்று நடைபெற்ற டாக்டர்கள் பேட்டி, ஒரு செட்டப் என்ற அதிரடி தகவலையும் கூறினார்.

லண்டன் டாக்டர் ரிச்சர்டு பிலேவின் பேட்டி ஏற்றுக்கொள்ள முடியாது என்பதில் தெளிவாக இருக்கிறேன். ஜெயலலிதா இறந்து இரண்டு மாதம் கழித்து, அவருக்கு கொடுக்கப்பட்ட சிகிச்சை என்ன என்பது குறித்து விளக்கம் என்ற பெயரில் ஏதோ ஒன்றை தெரிவித்து உள்ளனர் என்றார்..

ஜெயலலிதா  எதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், என்னென்ன சிகிச்சைகள் அளிக்கப்பட்டது, யார் இதை செய்ய சொன்னார்கள். ஏன் மற்றவர்களை அனுமதிக்கவில்லை போன்ற பல காரணங்கள் உள்ளது.

அதற்கெல்லாம்  அவர்களுடைய பிரஸ்மீட்டில் பதில் இல்லை.  எனவே, அந்த பிரஸ் மீட்டை நான் ஏற்றுகொள்ள மாட்டேன் என்றார்.

இந்த டாக்டர்கள் பிரஸ்மீட்டே ஒரு செட்டப்தான் என்றார்..

நாளை சசிகலா பதவியேற்பு என்று இருக்கும்வேளையில்,  இப்படி ஒரு பிரஸ் மீட்டை ஏற்பாடு செய்து அவர்கள் எண்ணத்தை நிறைவேற்றியுள்ளனர் என்று கேள்வி எழுப்பினார்.

ஜெயலலிதாவுக்கு ஸ்லோ பாய்சன் கொடுத்தார்கள் என்று பி.எச்.பாண்டியன் சொல்கிறாரே?  என்று செய்தியாளர் கேட்டதற்கு, எல்லோருடைய கருத்துக்கும் நான் பதில் அளிக்க முடியாது, என் கருத்தை மட்டும் கேளுங்கள் என்றார்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Doctors Interview was 'fake'! Deepa allegation, JEYALALITHA DEATH, ஜெ.மரணம் குறித்த டாக்டர்கள் பேட்டி ஒரு 'செட்டப்'! ஜெ.தீபா
-=-