ஜெ. மரணம்: விசாரணை ஆணைய காலஅவகாசம் மேலும் 10 வாரங்கள் நீட்டிக்க கோரி அரசுக்கு கடிதம்

சென்னை:

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணைய காலத்தை மேலும் 10 வாரங்கள் நீடிக்க கோரி அரசுக்கு கடிதம் எழுதப்பட்டு உள்ளது.

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை ஆணையத்தின் பதவிக்காலம் ஏற்கனவே 3 முறை கால அவகாசம் நீட்டிக்கப்பட்ட நிலையில், மேலும் 10 வதாரங்கள் கால அவகாசம் கோரி 4வது முறையாக விசாரணை ஆணைய நீதிபதி ஆறுமுகசாமி தமிழக அரசுக்கு கடிதம் எழுதி உள்ளார்.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடததிவரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணை யம் தனது விசாரணைகளை  ஓரளவு முடித்துவிட்ட நிலையில் ஜெ. பிறந்தநாளான  பிப்ரவரி வரும் 24ம் தேதி  விசாரணை அறிக்கை  சமர்பிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், இன்னும் ஓபிஎஸ் உள்பட ஒருசிலரிடம் விசாரணை நடத்த வேண்டியிருப்பதால், மேலும் அவகாசம் அரசிடம் கேட்டு அரசுக்கு கடிதம் அனுப்பி உள்ளது.

கார்ட்டூன் கேலரி