ஜெ. கைரேகை வழக்கு: சுப்ரீம்கோர்ட்டு இடைக்காலத் தடை

டில்லி,

ஜெயலலிதா கைரேகை தொடர்பான வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

சென்னை ஐகோர்ட்டில், மதுரை திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை சந்தித்த வேட்பாளரான டாக்டர் சரவணன் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், ஜெ.வின் கைரேகை சந்தேகத்திற்குறியது என்று கூறி உள்ளார். இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், மதுரை  திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற  அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ், சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்டுள்ள கைரேகை குறித்த் வழக்கு தடை கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திரந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த உச்சநீதி மன்றம்,  ஜெயலலிதா கைரேகை தொடர்பான அறிக்கையினை உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கத் தடை விதித்ததுடன், அந்த வழக்கின் விசாரணைக்கும் இடைக்காலத் தடை விதிப்பதாக குறிப்பிட்டுள்ளது.