“அம்மா..”…  என்னம்மா ஆச்சு உங்களுக்கு?:  தொடரும் ஜெ. மரண மர்மம்!

சென்னை:

மிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவன் மரணம் குறித்து பல்வேறு யூகங்கள் உலவி மக்களைக் குழப்பி வருகின்றன. இந்த நிலையில், மருத்துவர்கள் அளிக்கும் விளக்கங்கள், குழப்பத்தை தீர்ப்பதற்கு பதிலாக அதிகப்படுத்துவதாகவே இருக்கின்றன.

ஜெயலலிதாவுக்கு கிகிச்சை அளித்த லண்டன் டாக்டர் பீலே மற்றும் அப்பல்லோ மருத்துவர்கள் செய்தியாளர்கள் சந்திப்புக்கு சமீபத்தில் தமிழக அரசு சமீபத்தில் ஏற்பாடு செய்தது.  அப்போது, ”மருத்துவமனைக்கு வரும்போது, ஜெயலலிதா சுயநினைவுடன்தான் இருந்தார்” என்று ரிச்சர்டு ஜான் பீலே கூறினார்.

ஆனால், நேற்று எய்ம்ஸ் வெளியிட்ட 19 பக்க அறிக்கையில், ”மருத்துவமனைக்கு ஜெயலலிதா வரும்போது, மயக்க நிலையில்தான் இருந்தார்” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், ஜெயலலிதாவுக்கு வைக்கப்பட்டு இருந்த உயிர்காக்கும் கருவியை எடுக்க உத்தரவிட்டது யார் என்ற கேள்விக்கும் இதுவரை பதில் இல்லை. அவருடனே எப்போதும் இருக்கும் சிறப்பு பாதுகாப்புப் படையினர் எங்கே சென்றனர்?  அவர்களை வாபஸ் பெற்றது யார்? ஏன் அவர்கள் அப்பலோ மருத்துவமனைக்கு வரவில்லை?  முதல்வருக்கு என்று இருக்கும் ஆம்புலன்சை பயன்படுத்தாமல், ஏன் மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் வரவழைத்தது ஏன்? – இப்படி ஜெயலலிதா மரணம் குறித்து பல்வேறு கேள்விகள் வரிசை கட்டி நிற்கின்றன.

“அம்மா.. என்னம்மா ஆச்சு உங்களுக்கு?” என்று கதறும் அப்பாவித் தொண்டர்களுக்கு பதில் சொல்ல யாருமில்லை என்பது சோகம்தான்!

Leave a Reply

Your email address will not be published.