திருச்சி,

மிழக அரசின் பள்ளிப்பாடப் புத்தங்களில் தமிழக முதல்வராக இருந்த மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படம் இடம்பெற்றுள்ளளது.

தற்போது சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா முதல் குற்றவாளி என்று உச்சநீதி மன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.  இதன் காரணமாக அவரது படத்தை பள்ளிப்ப பாடப்புத்தங்களில் இருந்து அகற்றக்கோரி மக்கள் அதிகாரம் அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அதைத்தொடர்ந்து மக்கள் அதிகாரம் அமைப்பினர் இன்று திருச்சியில் உள்ள சையத் முத்துசா அரசு பள்ளிக்கு சென்று அங்குள்ள பள்ளிப் பாடப்புத்தங்களில் உள்ள ஜெயலலிதா படத்தின்மீது வள்ளுவர் படத்தை ஒட்டி போராட்டம் நடத்தினர்.

இதுகுறித்து மக்கள் அதிகாரம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஆனந்த் நம்மிடம், ஜெ. அரசு பொறுப்பு ஏற்றவுடன் சமச்சீர் கல்விக்கு எதிர்ப்பு தெரிவித்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்ற உத்தரவுக்கு பிறகு சமச்சீர் கல்வியை அறிமுகப்படுத்தியது. இந்த நிலையில் அரசியல் காழ்புணர்ச்சியில் பாட புத்தகங்களில் இடம்பெற்றிருந்த திருவள்ளுவர் படங்களை மறைக்கும் வேலை இந்த அரசாங்கம் செய்தது.

இதற்கு அப்போதே நாங்கள் கண்டனம் தெரிவித்திருந்தோம்.

அதே நேரத்தில் இன்றைய கால கட்டத்தில் உச்சநீதிமன்றத்தால் ஜெ.குற்றவாளி என்று அறிவிப்பு வெளியானவுடன் இன்று காலையில் மக்கள் அதிகாரத்தின் திருச்சி ஒருங்கிணைப்பாளர் ஆனந்த் தலைமையில் சையது முகுதூர்ஷா பள்ளியின் முன்பு நின்று கொண்டு அங்கே மாணவர்களின் புத்தக கையை வாங்கி அதில் ஒட்டப்பட்டுயிருந்த உச்சநீதிமன்றத்தால் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட ஜெயலலிதா உருவபடத்தை மறைத்து திருவள்ளுவர் படத்தை பாட புத்தகத்தில் நாங்கள் ஒட்டினோம் என்றார்.

தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் 5 பேரை கைது செய்து விசாரித்துக்கொண்டிருக்கிறார்கள்.