ஜெயலலிதா – பியூஸ் கோயல் சந்திப்பு

சென்னை:

மிழக முதல்வர் ஜெயலலிதாவை மத்திய மின் அமைச்சர் பியூஸ் கோயல் சந்தித்து பேசுகிறார்.

சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் மின் திட்டம் தொடர்பாக தமிழக முதல்வரை ஒருமுறை கூட சந்திக்க முடியவில்லை என பியூஸ் கோயல் குற்றம் சாட்டினார். இதை மறுத்து அதிமுக சார்பில் அப்போதைய மின்துறை அமைச்சர் காட்டமாக பதில் அறிக்கை வெளியிட்டார்.

     இது தமிழகம் முழுவதும் விவாத பொருளாகி அரசியல்வாதிகளால் காரசாரமாக விவாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் தமிழகத்திலிருந்து உபரி மின்சாரத்தை வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்ல தனி பாதை வேண்டும் என தமிழக முதல்வர் மத்தியஅரசிடம் கோரியிருந்தார். இது குறித்தும், உதய் மின் திட்டம்  உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து  முதல்வர் ◌ஜெயலலிதாவை சந்தித்து  ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிகிறது.