இபிஎஸ்-ஓபிஎஸ்-ஐ ஜெ.ஆத்மா மன்னிக்காது! தங்கத்தமிழ்செல்வன் ஆவேசம்

தூத்துக்குடி,

ஜெயலலிதா வாழ்ந்து வந்த போயஸ்கார்டன் வேதா இல்லத்தில் சோதனை நடத்துவதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்  என்றும்,  இதற்கு ஆதரவான முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோரை ஜெயலலிதா ஆத்மா மன்னிக்காது என்று டிடிவி தினகரன் ஆதரவாளர் தங்க.தமிழ்செல்வன் ஆவேசமாக கூறினார்.

ஜெயலலிதா வாழ்ந்து வந்த போயஸ்கார்டன்  வேதா இல்லத்தில் நேற்று இரவு முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.  குறித்து டிடிவி தினகரன் ஆதரவாளர் தங்க.தமிழ்செல்வன்  செய்தியாளர்களிடம் பேசியதாவது,

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட வேதா இல்லத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்துவதை  மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இதற்கு உடந்தையாக உள்ள  முதல்வர் பழனிசாமியும் மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வத்தையும் ஜெயலலிதா ஆத்மா ஒருபோதும் மன்னிக்காது என்றார்.

மேலும் பதவியை காத்துக்கொள்ளும் குறுகிய நோக்குடன் ஓபிஎஸ், ஈபிஎஸ் செயல்பட்டு வருகின்றனர். அதிமுகவின் வளர்ச்சியை பொறுத்துக்கொள்ள முடியாத மத்தியில் ஆளும் பாஜக அரசு இதுபோன்ற சோதனையை நடத்தி வருகிறது என்று ஆவேசமாக கூறினார்.