ஜெ. சிகிச்சை: செய்தியாளர் சந்திப்பின் ரகசியம்! உண்மையை உடைத்த லண்டன் டாக்டர்!

சென்னை:

றைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. இந்த நிலையின் அவருக்கு சிகிச்சை அளித்த லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பியல், டாக்டர் பாலாஜி, டாக்டர் பாபு உள்ளிட்ட மருத்துவர்கள் செய்தியாளர்களை சந்தித்து வருகிறார்கள்.

அப்போது ஏன் இவ்வளவு தாமதமாக செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் கொடுக்கிறீர்கள் என்று கேட்கப்பட்டது.

அதற்கு டாக்டர் பாலாஜி, ” இன்று சென்னையில் நடக்கும் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வ தற்காக லண்டன் டாக்டர் ரிச்சர்ட் வந்தார். அவர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளித்த நிபுணர் என்பதால் அவரும் இருக்கும்போது இந்த செய்தியாளர் சந்திப்பை வைத்துக்கொள்ளலாம் என்று ஏற்பாடு செய்தோம்.

மற்றபடி இப்படி செய்தியாளரை சந்தித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று அரசு தரப்பில் இருந்து எங்களுக்கு எந்தவித அழுத்தமும் வரவில்லை” என்றார்.

ஆனால், வேறொரு கேள்விக்கு பதில் அளித்த ரிச்சர்ட் பீலே, “இந்த செய்தியாளர் சந்திப்பை ஏற்பாடு செய்தது தமிழக அரசுதான். அப்பல்லோ மருத்துவமனை அல்ல” என்று தெரிவித்தா்.

ஆக, இந்த செய்தியாளர் சந்திப்பிலும் மர்மம் தொடர்கிறது!

கார்ட்டூன் கேலரி