ஜெ. வீடியோ.. வெற்றிவேல் மீது வழக்கு!: லக்கானி அறிவிப்பு

சென்னை,

ப்போலோ மருத்துமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெறும் காட்சி என்று டிடிவி தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் வீடியோவை வெளியிட்டதை அடுத்து அவர் மீது வழக்கு பதிய இருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி லக்கானி தெரிவித்துள்ளார்.

முன்னதாக, சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் கார்த்திகேயன் “யாரேனும் இது குறித்து புகார் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், வெற்றிவேல் மீது 126/ 1b பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளதாக லக்கானி கூறி உள்ளார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா. மருத்துவமனையில் இல்லாமல் சாதாரணாக அவர் கைகாட்டுவது போன்ற வீடியோக்களை வெளியிட்டிருந்தாலும் அதுவும் தேர்தல் விதி மீறல்தான்.

அகில இந்திய தலைமை தேர்தல் அதிகாரியாக பணியாற்றிய கோபால்சாமியும், “வீடியோவை வெளியிட்டது தேர்தல் விதி மீறல்” என்ற தெரிவித்திருந்தது குறிப்பிட்டத்தக்கது.